தலச்சிறப்பு |
சோழர்கள் காலத்தில் திருவாரூர் தலைநகராக திகழ்ந்தபோது, கோட்டைக்கு வெளியே அழகுடன் எழுந்த ஊர் என்னும் கருத்தில் 'பேரேயில்' என்று வழங்கப்பட்டது. பின்னர் மருவி 'பேரையூர்' என்று ஆனது.
மூலவர் 'ஜகதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'ஜகந்நாயகி', 'பெண்ணமிர்த நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் கற்பக விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, பைரவர், ஐயனார், சூரியன், சந்திரன், பஞ்சமூர்த்திகள், நடராஜர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|